Slide1

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக

கற்கத் தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும்; அவ்வாறு கற்ற பிறகு
கற்ற கல்விக்குத் தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.

(அதிகாரம்:கல்வி குறள் எண்:391)

Slide3

கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை
மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்

WELCOME TO ETC CANADA'S EDUCATION FUNDING

ETC அமைப்பின் கல்வித்தகமைக்கான நிவாரணம்

ETC அமைப்பானது மாணவர்களின் கல்வித் திறமையை அதிகரிப்பதற்காகவும் அவர்களின் மேலதிக கல்வித்தகைமைகளை வளர்பதற்காகவும் மாணவக்கல்வி திட்டத்தை அமுல்படுத்துவற்காக ஆயத்தமாகியுள்ளது. அதாவது வறுமைக்கோட்டின் கீழ் தங்கியுள்ள மாணவர்களுக்கும் தாய் தந்தையரை இழந்து மேலதிக கல்வியினை தொடர முடியாத நிலையில் உள்ள மாணவர்களுக்காகவும் இத்திட்டத்தை கொண்டு வருவற்காக ETC அமைப்பானது பெருமிதம் கொள்கின்றது.இதற்கு உறுதுணையாய் இருக்கும் அனைத்து அங்கத்தினருக்கும் தனது மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது.

தகைமைகள்

  1. மாணவர்களின் குடும்பத்தின் வாழ்க்கை வருமானநிலை குறைந்த பட்சத்தில் இருக்க வேண்டும். (உயர் கல்வியை தொடர முடியாத வருமானமாக இருத்தல் வேண்டும்.
  2. தாய் தந்தையரை இழந்து கல்விக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  3. விண்ணப்பிக்கும் மாணவர்கள் தேர்வு பரீட்சையின் மூலமாகவே தேர்ந்தெடுக்கப்படுவர்.

முக்கிய குறிப்பு

மாணவர்களின் உயர்கல்வி திட்டத்திற்கு குறித்த அளவிலான தொகைகளே வழங்கப்படவுள்ளது. மேலும் மாணவர்களின் உயர்கல்வியானது நிறைவுபெற்றதும், அவர்களின் தொழிலிற்கு செல்லும் தருவாயில் அந்த மாணவர்களிடம் உயர்கல்விக்கு செலவு செய்யப்பட்ட பணத்தொகையானது மாத தவணை முறையில் அறவிடப்படும். இவ்வாறு அறவிடுவதனால் எமது அமைப்பானது இன்னொரு வறிய மாணவனின் கல்விக்கு இவ்வாறான சலுகைகளை வழங்க முடிகின்றது. இன்னோர் சக மாணவனின் கல்விக்கு உறுதுணையாய் அமைவதற்கு இத் திட்டத்தினை நடைமுறைப்படுத்த உங்கள் அனைவரின் நல்லாசிகளை தாழ்மையுடன் எதிர்பார்க்கின்றது.